Oplus_131072
உளுத்தம் பருப்பு போண்டா செய்வது எப்படி……
தேவையான பொருள்கள்:
1. உளுத்தம் பருப்பு
2. பச்சை மிளகாய்
3. தேங்காய்
4. உப்பு
5. மிளகு
செய்முறை:
1. உளுத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
2. உளுத்தம் பருப்பு நன்கு ஊறிய பிறகு பச்சை மிளகாய், உப்பு (தேவையான அளவு) சேர்த்து நன்கு வெண்ணெய் போல மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
3. அரைத்த அந்த விழுதுடன் முழு மிளகு, சிறு துண்டுகளாக்கிய தேங்காய் ஆகிய இவைகளைப் போட்டு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி காய்ந்த எண்ணெய்யில் போட்டு சிறிது பொன்னிறம் வந்த மாத்திரத்தில் எடுக்கவும். (இரு புறமும் வேக நன்கு குச்சியால் திருப்பிப் போட்டுக் கொள்ளவும். அதே போல தீய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்)
4. இதோ இப்போது சுவையான உளுத்தம் பருப்பு போண்டா தயார். (தேவை ஆனவர்கள் இரண்டு பெரிய வெங்காயத்தையும் நறுக்கி மாவுடன் போட்டுச் செய்யலாம்)
மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று. இதன் வெளித் தோல் கருப்பாகவும், உட்புறம்நன்கு வெண்மையாகவும் காணப்படும்.கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.




