பணம் நம்மிடம் இல்லை என்றால் உறவினர்கள் நம்மை எவ்வாறு நடத்துவார்கள் தெரியுமா? உங்களுக்கு
என் அனுபவத்துல சொல்றேன்
கொஞ்சம் கூட நம்மள மனுசங்களா மதிக்கவே மாட்டாங்க.
அவங்க தேவைக்கு நம்மள பயன் படுத்திக்குவங்க.
அவங்க வீட்ல எந்த நல்லது கெட்டது நாலும் நமக்கு யாரோ சொல்லிதான் தெரிய வரும்.
முக்கியமா நம்ம வீட்டுக்கு வருவதை கம்மி பண்ணிக்குவாங்க.
நாம அவங்க வீட்டுக்கு போனாலும்
அவ்வளவா வரவேற்பு மரியாதை எல்லாம் இருக்காது.
நாமா எதார்த்தமா பாசமா பேசுனா கூட
இவன் அன்பா பேசுற மாதிரி பேசி
பணம் எதுவும் கேட்டுட போரானோ னு
பேச்சை குறைத்து வேற வேலையை
கவனிப்பாங்க.
ரெண்டு வார்த்தை அதையும்
அளந்து அளவாதான் பேசுவாங்க.
அறிவுரை அடை மழையா பொழிவாங்க.
வசதியான உறவுகள் வீட்டு
விசேஷங்களுக்கு தப்பி தவறி வசதி கம்மியாக உள்ள நாம போயிட்டா
நம்மள நல்லா வேலை வாங்கிக்குவாங்க.
ஆனா மத்த பணக்கார உறவுகளுக்கு அவர்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும் மரியாதை கூட நமக்கு கிடைக்காது.
தன்மானம் நிறைய உள்ள நாம
எந்த ஒரு தவறும் செய்யாத போதும்,
பணமில்லாத ஏழையாக இருக்கறதாலேயே
அவமானங்களை சந்திக்க வேண்டிய
நிலை வரும்…
பணமில்லாவிட்டால் ஒரு நாள் பொழுதை நீங்க கழிக்க முடியாது.
மளிகை பொருட்கள், குழந்தைகளின் படிப்பு, அன்றாடம் செலவு, போக்குவரத்து, டாக்டர் பில் முதற்கொண்டு எல்லாவற்றிக்கும் பணம் வேண்டும்.
பணம் இல்லை என்றால் உங்கள் தன்மானம் அழிந்து விடும். உங்கள் வாழ்க்கை #துணை கூட உங்களை மதிக்க மாட்டார்கள்.
பணம் இல்லை என்றால் செத்த பிணம் தான்..
உயிரற்ற பணத்திற்கு இருக்கும் மதிப்பு கூட! உயிருள்ள மனிதனுக்கு இருப்பதில்லை.




