தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நாளை (ஜூலை 25) தொடங்க உள்ளார். இந்த `உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் கட்சி தொண்டர்களை அன்புமணி ராமதாஸ் சந்திக்கிறார். இந்நிலையில், அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், “எனது அனுமதி இன்றி அன்புமணி பாமக கொடி, நிர்வாகிகள் சந்திப்பு, பிரசாரம் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.




