மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவுக்கு புறப்பட்ட விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு பெட்டியில் இளம்பெண்கள் அதிக அளவில் இருந்தனர். இளம்பெண்களின் கைகளில் முத்திரை எண்கள் இருந்துள்ளன. சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களை அழைத்து வந்த ஒரு ஆண் மற்றும் பெண்ணிடம் விசாரித்ததில், பெங்களூருவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, பீகாருக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. பெண்களை மீட்ட அதிகாரிகள் 2 பேரை கைது செய்தனர்.




