உ.பி.: 2 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த காயத்ரி என்பவரின் வங்கி கணக்கிற்கு ரூ.10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகன் தீபக் மெசேஜை பார்த்து வங்கிக்கு சென்று சரிபார்த்துள்ளார். அப்போது அதே தொகை வங்கி கணக்கில் இருந்துள்ளது. இதை அறிந்த வங்கி ஊழியர்கள் அவரின் கணக்கை முடக்கி வைத்துள்ளனர். தற்போது பணம் எப்படி வந்தது என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.




