ரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது. சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. 1XBet என்ற சூதாட்ட செயலி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் அமலாக்க துறை, அதில் சுரேஷ் ரெய்னாவுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க உள்ளது. அதன்படி டெல்லியில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் இன்று ரெய்னா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.




