உ.பி: பிஜ்னோர் மாவட்டத்தில், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக சமந்த்ரா என்ற பெண், ஒரு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். அந்த குடும்பத்தினருக்கு சில நாட்களாக சமந்த்ராவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், ரகசிய கேமரா பொருத்தியுள்ளனர். அதில், சமையலறையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தபோது, சமந்த்ரா சிறுநீர் கழித்துள்ள காட்சி பதிவாகியுள்ளது. இதையடுத்து, அவரை நாகினா போலீசார் கைது செய்துள்ளனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




