நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே குப்புச்சிபாளையம் மண்டபத்து பாறையில் உள்ள தேங்காய் கிடங்கில் தங்கி வேலை செய்து வந்த பெரியசாமி-லட்சுமி தம்பதியினரின் மகன் அரவிந்த் மாரியப்பன் (வயது 8), சனப்பங்காடு காலனி அருகே உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.




