மத்தியப் பிரதேசம்: சத்ரப்பூரில் 4 வயது சிறுவன் ஆதித்யா நேற்று (ஆக.22) வயலில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது ஓரமாக இருந்த ஓட்டையை பார்த்த சிறுவன் அதற்குள் கையை விட்டான். உள்ளே இருந்த விஷப்பாம்பு ஆதித்யாவின் கையில் கடித்தது. வலியால் அலறி துடித்த அவனை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் ஆதித்யாவின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.




