அப்பாவை பற்றி மிகவும் அழகான வரிகள்..!! நான் படித்ததில் ரசித்தது..!!

சிறு பருவத்தில் தோளில் சுமந்தாய் !! இளமை பருவத்தில் இனிமை தந்தாய் !! துவண்ட பருவத்தில் துணையாய் இருந்தாய் !! துன்பம் இல்லா பருவத்தில் ஏனோ !! தூரத்திர்க்கு சென்றாய் !!!

அம்மாவின் அன்பை விட சிறந்த அன்பு உலகில் இருக்கிறதென்றால் அது அப்பாவின் அன்பு !

மாறாத அன்பு அம்மாவின் அன்பு என்று திருமணமாகதவன் சொன்னது ! மாறாத அன்பு அப்பாவின் அன்பு என்று திருமணமானவன் சொன்னது !

மகனிடம் தோற்பதை லட்சியமாய் கொண்டவர் ! மகன் தோற்றாலும் வெற்றிக்கு நம்பிக்கை கொடுப்பவர் ! மகன் நடைபயில மகன் வேகத்துக்கு நடப்பவர் ! மகன் ஒடுவதை ஒதுங்கி நின்று ரசிப்பவர் ! முதுமையில் மகன் கரம் பிடித்து குழந்தைப் போல் நடப்பார் அப்பா !

தந்தையிடம் வாக்குவாதம் பண்ணுவதில் பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் சுதந்திரம் ஆண்பிள்ளைகளுக்கு இல்லை….

நம்மை முன்னே நடக்க சொல்லி பின்னால் மகிழ்வதும், நம்மை முன்னேற சொல்லி பின்னின்று ஆனந்தப்படுவதும், இவரால் மட்டுமே முடியும் -அப்பா

ஒன்றுக்கும் உதவாதவன் உருப்பிடதவன் ,தண்டசோறு தடிமாடு என்று நம் முன்னால் அதிகம் திட்டினாலும் உடல் நல குறைபாடு ஏற்பட்டு அயர்ந்து தூங்கும் பொழுது நமக்கே தெரியாமல் நம் கால்களை நீவி விட்டு நமக்காக சில துளி கண்ணீர் விடுவார் நம் தந்தை….

தோளில் சுமந்தாலும் , வார்த்தையால் வழி நடத்திய, கண்ணரிந்த தெய்வம் நீ வெளிப்படையாய் அன்பு காட்டி நடிக்கும் உறவினர்கள் மத்தியில் உள்நெஞ்சில் ஆழ் கடல் அன்பால் என்னை வழி நடத்தியவன் நீ என்றும் நீயே என் வழிகாட்டி என்றும் நீயே என் தெய்வம் தந்தையே !!

கால தாமதம் …….. தாய், தந்தை இந்த பொக்கிஷங்கள் உடனிருக்கும் பொது பணத்தை தேடி அலைந்தேன், பணம் வந்த வேளையிலே பொக்கிஷங்களை இழந்தேன்…. உண்மையை விட்டு பொய்யை தேடி வெகுதூரம் அலைந்தேன், காலன் போட்ட கணக்கினாலே அத்தனையும் இழந்தேன், எனது உறவுக்கு துவக்கம் தந்த உங்களை காண தவம் கிடக்கின்றேன்….. கருணையோடு வாய்ப்பு கொடுங்கள் உங்கள் காலடி தொழுது கிடக்க

தாயின் பாரம் பத்து மாதம் தான் நீயோ ஆயிள் வரை சுமக்கும் தாயாகிறாய் அறிவுக்கே அறிவுரை கூறும் ஆசானே ஆயிரம் வித்தகர்களை உன் ஒற்றை வார்த்தையில் கண்டேன் பார்வையால் சுட்டெரிக்கும் சூரியனாய் பணிவால் உருகச் செய்யும் பனிமலையாய் அன்பை மட்டுமே அடை மழையாய் பொழியும் தந்தை எனும் விந்தையே ஆண்டவனே அடைக்கலம் தேடும் உன் அன்பு நெஞ்சம் தான் எனக்குத் தஞ்சம்….

பொறுமையே இல்லாதவன் கூட ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியும் ஆனால் பொருப்புள்ளவன் தான் தந்தையாக முடியும்…

ஏன் அப்பா என்னை விட்டு சென்றாய் – கடவுளுக்கு அன்பு போதிக்கவா! இல்லை நான் உண்மையாக அழ வேண்டும் என்பதற்காகவா ? உன் விருப்படியே படித்தேன் பட்டமும் பெற்றேன்…, பாராட்ட நீ இல்லையே- அப்பா நல்லதொரு வேலையும் பெற்றேன்…, நீ இல்லையே சந்தோசப்பட…. என்னிடம் பொய் கூறி விட்டாய் காலம் முழுவதும் சுமப்பேன் என்று…, உன்னை நினைக்கும் போது- ஆறுதல் சொல்ல கண்ணீர் மட்டுமே எனக்கு…, -ஆனால் என்னை பற்றிய நினைவே இல்லாமல் – உறங்கி கொண்டிருக்கிறாய் மண்ணுக்குள்ளே….

நானும் காட்டியதில்லை அவரும் காட்டியதில்லை எங்கள் பாசத்தை… இருந்தும் காட்டிக் கொடுத்த கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை

சொல்லிக் கொடுத்ததில்லை திட்டியதும் இல்லை இல்லை என்றும் சொன்னதுமில்லை வேண்டாம் எனக் கூறியதும் இல்லை இருந்தும் ஏதோ ஒன்றினால் கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு…..

நம்மிடம் அடுத்தவர் காட்டும் நேசம் கண்டிப்பாக எதையோ எதிர்பார்த்தே நிற்கும் ஆனால் சற்றும் சுயநல நோக்கம் இல்லாமல் எப்போதும் நம் நலனை விரும்பும் நலன் விரும்பி நம் “அப்பா”.

தன் குடும்ப நலனில் அதிக அக்கறை கொண்டதன் தாக்கமே தந்தையின் கோபம் சற்று யோசித்து பார்த்தால் அவரின் கோபத்திலும் நியாயம் கலந்து இருக்கும்.

பள்ளிக்கு அன்று நீங்கள் என்னை காட்டிலும், மேட்டிலும் மிதிவண்டியில் சுமந்து வந்து விடுவீர்கள். இன்று என்னிடம் ஆடம்பர கார், பங்களா என எல்லாமே இருந்தும் நீங்கள் இல்லாமல் வெறுமையாய் உணர்கிறேன்.

நான் பிறந்த போது என் பெயரின் பின்னால் வரும் முதல் எழுத்து நீ தான், இன்று என் வாழ்க்கையை அழகாய் மாற்றி கொடுத்து என்னை நல்லபடியாக கரை சேர்க்க என் பின்னால் நிற்பதும் நீ மட்டும் தான்.

என் அன்பு தந்தையே, உன் போல் என்மேல் இவ்வளவு அக்கறை கொள்ள யாரும் இல்லை இந்த பூமியிலே, உன் பாச பிணைப்பால் என்றென்றும் நாள் பொழுதும் கிடப்பேன் உங்கள் தோள்களிலே, அன்பு என்ற ஒன்றின் அடையாளமே நீங்கள் மட்டும் தான், நீங்கள் சொல்லி கொடுத்த வாழ்க்கை பாடம் புரிகிறது இந்த நாட்களில் தான், உனக்கு என்று ஒன்றுமே இல்லையே ஆனால் நான் கேட்பதை எல்லாம் நீ செய்யாமல் இருந்தது இல்லையே, கடவுள் உண்டு என்றால் அவரிடம் நான் உங்களையே கேட்பேன் வரமாக ஏழு பிறவியிலும் நீங்கள் தான் வேண்டும் என் தந்தையாக.

அனுதினமும் அலுவலக அலுப்பு, அன்றாடம் குடும்ப பாரம், சொந்த வீட்டு கடன், தன் பிள்ளையின் கல்வி கடன், இதர செலவுகள் என அனைத்தையும் தன் தோள்களில் மேல் போட்டு கொண்டு சுமைதாங்கியை போல் வாழ்ந்து வரும் அனைத்து தந்தையர்களும் மதிக்கப்பட வேண்டியவர்கள்.

Read Previous

வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழால் சைபர் கிரைமில் ₹1.9 லட்சம் இழந்த அரசு ஊழியர்..!!

Read Next

தவெக மாநாட்டில் பங்கேற்ற இளைஞர் உயிரிழப்பு..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular