காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (24). கடந்த சில மாதங்களாக ராஜசேகர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ராஜசேகருக்கும் அவரது தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஆக.22) ராஜசேகர் வழக்கம்போல மது குடித்துவிட்டு வந்தார். இதை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனமுடைந்த ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.




