மாற்றத்தின் முதல் படி நாம் நம்மைபற்றிய உண்மையை ஏற்றுக்கொள்வதே என்பதை உணர வைத்த பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_131072

*படித்ததில் பிடித்தது:*

*ஜப்பான் :* அமெரிக்கா வீசிய அணுகுண்டுகள் தாக்கி நாசமாகிய ஜப்பான்,
உலகின் பரிதாபத்தை நாடவில்லை.
உதவி யாசிக்கவில்லை.
தன் பெருமையுடனும், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் சாம்பலிலிருந்து எழுந்தது. அதன் பின் ஒரு போதும் அமெரிக்காவிடம் கை நீட்டவில்லை.

ஒரு இந்தியரின் ஆச்சரியம்…

ஒரு இந்தியர், ஜப்பானில் ஓராண்டுக்கும் மேலாக வாழ்ந்தார். அங்குள்ள மக்கள் மரியாதையுடனும், பணிவுடனும், உதவித்தன்மையுடனும் நடந்தார்கள். ஆனால் ஒரு விஷயம் அவரை வியக்க வைத்தது. யாரும் அவரை வீட்டிற்கு அழைக்கவில்லை. ஒரு தேநீர் கூட தந்தது இல்லை.

அதற்கான காரணத்தை ஜப்பான் நண்பர் ஒருவரிடம் கேட்டார்.

ஜப்பானிய நண்பர் நீண்ட அமைதிக்குப் பின் மெதுவாகச் சொன்னார்:

“நாங்கள் இந்திய வரலாற்றைக் கற்கிறோம், ஊக்கமளிக்க அல்ல, நாங்கள் அதை பின்பற்றக் கூடாது என்பதற்காக”,

அதனைக் கேட்ட இந்தியர் அதிர்ச்சியடைந்தார்.

ஜப்பான் நண்பர் தொடர்ந்தார்:

“பிரிட்டிஷ்காரர்கள் எத்தனை பேர் இந்தியாவை ஆட்சி செய்தார்கள்?”
“சுமார்… 10,000 பேர்.”

“அப்போது உங்களிடம் 30 கோடி மக்கள் இருந்தார்கள். அப்படியிருக்க யார் உங்களை அடங்கி போகச்சொன்னது?

“ஜெனரல் டையர் “FIRE” என்ற கட்டளை பிறப்பித்த போது, ஆயுதமற்ற உங்கள் சகோதரர்களை சுட்டவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் அல்ல… பிரிட்டிஷ் படையிலிருந்த இந்தியர்களே.”

ஒருவர் கூட துப்பாக்கியை ஜெனரல் டையர் பக்கம் திருப்பவில்லை. ஆக
உங்களுக்கு அடிமைத்தனம் உடலின் இல்லை… ஆன்மாவில் இருந்தது.”

“மத்திய ஆசியாவில் இருந்து எத்தனை முகலாயர்கள்கள் வந்தார்கள்?

சில ஆயிரம் பேர்.

ஆனாலும் நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தார்கள்.

ஏன்?

உங்கள் சொந்த மக்கள் தங்கள் உயிர் காக்க மதம் மாறினார்கள்.

விடுதலை போராட்ட வீரர்
சந்திரசேகர் ஆசாத்துக்கு துரோகம் இழைக்கப்பட்டது. பகத் சிங்குக்காக காந்தி ஒருநாள் கூட உண்ணாவிரதம் இருக்கவில்லை.”

“உங்களுக்கு வெளிநாட்டு எதிரிகள் தேவையில்லை. உங்களுக்கு சுதந்திரம் கிடைத்தபின் உங்கள் நாட்டு அரசியல்வாதிகளே அதிகாரம், பதவி, என சொந்த நலனுக்காக துரோகம் செய்கிறார்கள். அதனால்தான் நாங்கள் இந்தியர்களிடம் இருந்து தூரமாக நிற்கிறோம்”

“பிரிட்டிஷ்காரர்கள் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூருக்கு வந்தபோது, ஒரு சொந்த நாட்டவரும் பிரிட்டிஷ் படையில் சேரவில்லை. ஆனால் இந்தியாவில், நீங்கள் எதிரிக்கு பணிந்தீர்கள்.
ஜாலியன் வாலா பாக்-இல் பிரிட்டிஷ் படையில் சேர்ந்த இந்திய வீரர்களே சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவித்தனர்.

நீங்கள் இன்னும் மாறவில்லை, இலவச மின்சாரம், இலவச அரிசி, இலவச TV, கொடுத்துவிட்டால், உங்கள் வாக்கும், மனச்சாட்சியும் விற்கப்படுகிறது.”

“நீங்கள் உங்கள் கோரிக்கைகளுக்காக கோஷங்கள் இடுகிறீர்கள், பேரணி நடத்துகிறீர்கள். ஆனால் மீண்டும் மீண்டும் ஊழல்வாதிகளையே தேர்ந்தெடுத்து ஆட்சி பீடத்தில் அமர்த்துகிறீர்கள் “.

இறுதியாக சொன்னார்,

“உங்கள் நாடு வலிமையில்லையெனில், உங்கள் வீடு ஒரு போதும் பாதுகாப்பாக இருக்காது. நீங்கள் பலவீனமானால், எந்தக ஊழல் கட்சியும் உங்களை காப்பாற்றாது.”

தற்போது இந்தியாவுக்கு தேவை உண்மையான தேசபக்தர்கள். தளராத குணத்துடன் கூடிய குடிமக்கள் தேவை.
விடுதலைப் போராளிகள் மட்டும் அல்ல, விடுதலையை காப்பவர்கள் தேவை.
கையில் கொடி மட்டும் அல்ல, உங்கள் இதயத்தில் தேசப்பற்று தேவை.

இது கசப்பான விஷயம் தான்.

ஆனால் இது தான் உண்மை.

மாற்றத்தின் முதல் படி நாம் நம்மைபற்றிய உண்மையை ஏற்றுக்கொள்வதே.

சரிதானே!!

 

Read Previous

பிசிசிஐ ஒப்பந்தம் பாதியில் முடிந்தாலும் ட்ரீம்11 அபராதம் செலுத்தத் தேவையில்லை..!! ஏன் தெரியுமா?..

Read Next

ரஷ்யாவுடனான போருக்கு இடையே பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வருகிறார் உக்ரைன் அதிபர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular