காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார். சென்னையில் இன்று (ஆகஸ்ட் 26) நடைபெற்ற காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய பஞ்சாப் முதல்வர், “ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவை வழங்குவது அசாத்தியமானது. அதனை செய்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள்” என பேசினார்.




