மகாராஷ்டிரா: உம்ரி பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. இதனிடையே லகான் என்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். சம்பவத்தன்று இருவரையும் கையும் களவுமாக பிடித்த குடும்பத்தினர் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த சஞ்சீவானியின் தந்தை உள்ளிட்டோர் வீட்டிற்கு கூட்டிச் செல்லும் வழியில் அடித்து, கை, கால்களை கட்டி இருவரையும் கிணற்றில் தள்ளி கொலை செய்தனர்.




