ஜிஎஸ்டி சீர்திருத்தம், பொருட்கள் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது. மந்தமான பொருளாதார வளர்ச்சியா? பீகார் தேர்தலா? டிரம்பின் வரி விதிப்பா? ஜிஎஸ்டி வரியில் மாற்றத்தை கொண்டுவர மத்திய அரசை தூண்டியது எது? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.




