நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் உயிரிழந்தனர். 50 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டின் தேசிய அவசரநிலை மேலாண்மை அமைப்பின் அதிகாரி ஹுசைனி இசா தெரிவித்தார். விபத்து நடந்தபோது படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 90 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. படகு அதன் கொள்ளளவை மீறி அதிக பயணிகளுடன் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.




