ஆந்திரா: அனந்தபூர் மாவட்டத்தில் வாட்டர் பாட்டில் மூடியை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மவுனிகா என்பவர் தனது மகன் ரக்ஷித்ராமை, தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர் வேலை பார்த்து கொண்டிருந்த போது, குழந்தை தண்ணீர் பாட்டில் மூடியை விழுங்கியுள்ளது. இதையடுத்து, ரக்ஷித்ராம் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிந்தது.




