மத்தியப்பிரதேசத்தில் நவராத்திரி திருவிழா தொடங்கப்பட்டுள்ளதையொட்டி போபாலில் இறைச்சி, மீன் மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் வரும் அக்., 2ஆம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புரட்டாசி மாத பிறப்பையொட்டி, தமிழ்நாட்டில் இறைச்சி, மீன் விற்பனை மந்தமாகியுள்ளது. விலையும் பெருமளவில் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




