ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா..?? சரி செய்ய சில மருத்துவ குறிப்புக்கள்..!!

Oplus_131072

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? சரி செய்ய சில மருத்துவ குறிப்புக்கள் !!

ஒழுங்கற்ற மாதவிடாய் என்றால் மாத மாதம் மாதவிடாய் நிகழாமல் இருப்பதுதான். இதற்கு வாழ்க்கை முறையில் மாற்றம், ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள் போன்று பல காரணங்கள் உள்ளது.

ஒழுங்கற்ற மாதவிடாய். நம்முடைய வாழ்வியல் முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவை இத்தகைய ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதற்கு வழிவகுக்கின்றன.

இதனை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. தற்போது ஒழுங்கற்ற மாதவிடாயால் அவதிப்படும் பெண்களுக்கு ஒரு இயற்கை வழிமுறைகள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.

பப்பாளியை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக நடைபெறும். மெனோபாஸ் பிரச்சனைகளுக்கான சரியான தீர்வு பப்பாளி.

ஒரு மேசைக்கரண்டி தேனுடன் சம அளவில் துளசி சாற்றை எடுத்து கொண்டால் இதன் மருத்துவ குணத்தை முழுமையாக அடைய முடியும். இதனால் மாதவிடாயின் போது வரும் கீழ் முதுகு வலி சீராகும்.

கற்றாழை ஜெல்லை தேனுடன் கலந்து தினமும் காலையில், சாப்பிடுவதற்கு முன் இதனை சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக மாதவிடாய் சார்ந்த கோளாறுகள் குணமடையும்.

ஒரு குவளை பாலில் 1/2 டீஸ்பூன் இலவங்க தூளை சேர்த்து தினமும் குடித்து வந்தால் இது குணமடையும்.

ஆலமர வேரினை நீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, அதனுடன் பால் கலந்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டும்.

இரவில் எள்ளு விதைகளை தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை பருகினால் பலன் அடைவது நிச்சயம்.

சீரக விதையின் மாவை நீரில் ஊறவைத்து அந்த நீரை பருகினால் மாதவிடாயின் போது வயிற்று வலி போன்ற உபாதைகள் இருக்காது. இதில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளதால் மாதவிடாயின் போது இரம்பு சத்து குறைப்பாடு நிகழ்ந்தால் இந்த விதைகள் காக்கும்.

 

Read Previous

இருதய அடைப்பு, இருதய வலி நீங்குவதற்கு.. மும்மூர்த்தி சூரணம்..!!

Read Next

முகப்பரு வராமல் தடுக்க இயற்கை வழிகள் முகப்பரு நீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular