Oplus_131072
தீரவே தீராது என்ற பிரச்சனையை கூட தீர்க்கும் சக்தி வாய்ந்த முருகன் மந்திரங்கள்…
தமிழ் கடவுளான முருகப் பெருமான் சிவசக்தியின் ஐக்கியமான உருவமாக கருதப்படுகிறார். உலகத்தை படைத்து காத்தருளும் ஈசனுக்கே வேதத்திற்கு பொருள் உரைத்ததால் இவர் குருவிற்கு எல்லாம் மேலான குருவாக கருதப்படுகிறார்.
“சுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்பார்கள். முருகனை வணங்கினால் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அது தீர்ந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை
முருகன் மூல மந்திரம் :
“ஓம் சரவண பவாய நமஹ”
முருகன் ஸ்லோகம் :
“ஞான சக்திதர ஸ்கந்தா
வள்ளிகல்யாண சுந்தரா
தேவசேனா மண காந்த
கார்த்திகேயா நமோ ஸ்துதே
ஓம் சுப்ரமணியாய நமஹ”
முருகன் காயத்ரி மந்திரம் :
“ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாஸேனாய தீமஹி
தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்”
துன்பம் போக்கும் முருகன் மந்திரம் :
“உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே”




