2025 மகளிர் உலகக் கோப்பை போட்டியில், ஆஸ்திரேலிய அணி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிற்கு எதிராக 331 ரன்களை சேஸ் செய்து வரலாற்று வெற்றியை ஆஸ்திரேலியா பதிவு செய்துள்ளது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சேஸ்செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுவாகும். 142 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா கேப்டன் அலிசா ஹீலி வெற்றிக்கு உறுதியாக இருந்துள்ளார். இந்திய அணிக்கு பிரதிகா ராவல் (75) மற்றும் ஸ்மிருதி மந்தனா (80) அரைசதம் அடித்து வலுவான தொடக்கம் ஆட்டத்தை அளித்தனர்.




