தினம் 10 கறிவேப்பிலையினை உண்டு வந்தால் நடக்கும் அதிசயம் என்ன தெரியுமா..??

Oplus_131072

தினம் 10 கறிவேப்பிலையினை உண்டு வந்தால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக நமக்கு கடையில் கொசுறாக கொடுக்கும் கறி வேப்பிலையில் நம் உடலுக்கும் குடலுக்கும் நன்மை செய்யும் பொருட்கள் ஏராளமாய் நிறைந்து காணப்படுகிறது .அந்த வகையில் இந்த கறி வேப்பிலையை உணவில் சேர்த்து வருவதால் நம் உடலில் எந்த நோய்களை விரட்டலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக சிலருக்கு ரத்த சோகை இருக்கும் .அவர் தினம் 10 கறிவேப்பிலையினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கலாம் .
2.சிலருக்கு முடி கொட்டி கொண்டேயிருக்கும் ,அவர்கள் கறிவேப்பிலை உணவில் சேர்த்து வந்தால் நரைமுடி, முடி கொட்டுதல், முடி உடைதல் போன்ற பிரச்சினை ஏற்படாது.
3.கறிவேப்பிலையில் உள்ள அதிக அளவில் நார்ச்சத்து , நமது செரிமான ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து மிக மிக முக்கியம்.
4.கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்கள் உள்ளது
5.கறிவேப்பிலையில் வைட்டமின் எ, பி, சி, இ போன்ற விட்டமின்களும் நிறைந்துள்ளது. –
6.கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்பட்ட சாறு அல்லது கறிவேப்பிலையைப் பொடி செய்து உண்பதனால் வயிற்றுப் போக்கு குணமாகும்.
7.மேலும் கறிவேப்பிலையை மலச்சிக்கல் பிரச்சினையைச் சமாளிக்கக்கூடிய ஒரு மலமிளக்கியாகப் பயன்படுத்தலாம்.
8.கறிவேப்பிலைச் சாறுடன் தேன் கலந்து உட்கொள்வது கூட வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய்க்கான மற்று மருந்தாக இருக்க முடியும்.
9.கறிவேப்பிலையின் இலை, வேர், பட்டை, தண்டு மற்றும் பூக்களைத் தண்ணீரில் கொதிக்க வைத்துப் குடிக்கலாம் .இப்படி பருகினால் வயிற்றில் இருக்கும் அனைத்து விதமான தொந்தரவுகளிலிருந்தும் விடுபட முடியும்.

Read Previous

ஆஸ்துமா நோயால் அவதிப் படுகிறீர்களா… இதோ தடுப்பதற்கு எளிய தீர்வு..!!

Read Next

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு..!! இன்றைய விலை நிலவரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular