முடக்கத்தான் கீரையின் அற்புதமான பயன்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

*#முடக்காத்தான் கிரை*

ஆரோக்கியம் தரும் பல்வேறு கீரை வகைகளுள் ‘முடக்கத்தான்’ எனப்படும் இந்த கீரை வகை பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை நீக்கி, நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக இந்த கீரைக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் ஒரு காரணப்பெயர்.

ஆமாம், *”முடக்கு வாதத்தை நீக்கும் சக்தி இந்த கீரைக்கு இருக்கறதால, ‘முடக்கத்தை அறுப்பதுன்னு’ அர்த்தம் வர்ற வகையில முடக்கு காத்தான் என்பது மருவி முடக்காத்தான் என்று ஆகியுள்ளது. நம்ம முன்னோர்கள் சாதாரணமானவர்கள் இல்லைங்க. ஒவ்வொரு விஷயத்திலும் அறிவியல் காரணங்களை கண்டறிந்து அதன்படி வாழ்ந்ததாலதான் அன்னிக்கு அவ்வளவு ஆரோக்கியமா இருந்திருக்காங்க.*

ஓகே நம்ம மேட்டருக்கு வருவோம்.
*முடக்கத்தான் கீரை பயன்கள் என்னென்ன*

*வாத நோய்கள்:*

பொதுவாக வாத நோய்கள் அதிகமா வரும் குளிர் காலமான ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள்தான் இருக்குன்னு சித்த மருத்துவத்துல சொல்ளியிருக்கங்க. இந்த முடக்கத்தான் கீரை, வாத நோய்களுக்கு நல்ல ஒரு தீர்வா இருக்குது.

*மலச்சிக்கல், கரப்பான், கிரந்தி:*

முடக்கத்தான் கீரையில வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைய இருக்கு. இதை உணவுல தொடர்ந்து சேர்த்துட்டு வந்தா மலச்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்களும் குணமாக பெரிதும் உதவும்.

*தோல் நோய்கள்:*

முடக்கத்தான் கீரை தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணமா இருக்கு. முடக்கத்தான் கீரையை நல்லா அரைச்சு சொறி, சிரங்கு மாதிரி தோல் நோய் இருக்கும் இடத்துல பத்து மாதிரி வச்சுக்கிட்டா நல்ல நிவாரணம் கிடைக்கும்.

*மூல நோய்:*

மலச்சிக்கல் இருக்கறவங்களுக்கு சொல்லாமலேயே மூல வியாதி வந்திடும். மூலநோய் உள்ளவங்க தினமும் பச்சையா கொஞ்சம் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வந்தா, மூல நோய் விரைவில் குணமாகும்.

*காது வலி:*

காது வலி பிரச்சனைகளுக்கு முடக்கத்தான் கீரையை நல்லா அரைச்சு சாறெடுத்து, அதுல சில துளிகளை காதுகளுக்குள் விட காது வலி நீங்கும்.

*மாதவிடாய் பிரச்சனைகள்:*

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வா முடக்கத்தான் செயல்படுது.

*குழந்தை பெற்ற பெண்கள் :*
mudakathan keerai benefits in tamil-இந்த முடக்கத்தான் கீரையை நல்லா அரைச்சு குழந்தை பெற்ற பெண்களுக்கு அடிவயித்துல பூசி வந்தா கருப்பையில உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

*மூட்டு வலி:*

முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, உடல்ல வாதத் தன்மை கட்டுப்படுத்தப்பட்டு, மூட்டு வலியை இல்லாமல் போகும். முடக்கத்தான் இலைகளை ஆமணக்கு எண்ணையில நனைச்சு எல்லா மூட்டு பகுதிகளிலும் தேச்சு வந்தாலும் மூட்டு வலியிலிருந்து குணம் கிடைக்கும்.

*தலைவலி:*

ஜலதோஷத்தால வர்ற தலைவலிகளுக்கு முடக்கத்தான் இலைகளை நல்லா கசக்கி, வெந்நீர்ல போட்டு ஆவி பிடிச்சா தலைவலி சரியாகும்.

*பொடுகு தொல்லை:*

பொடுகுத் தொல்லை இருக்கறவங்க முடக்கத்தான் இலைகளை சேர்த்து செஞ்ச எண்ணெயை தலைக்கு தடவி வந்தா பொடுகு தொல்லை நீங்கும்.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கலந்து தோசையாகவும், துவையலாகவும் சாப்பிடலாம்.

mudakathan keerai benefits in tamil-இவ்வளவு பயனுள்ள மூலிகைகளை நாம் மறந்து போய்ட்டோம். தொட்டதுக்கெல்லாம் டாக்டர்கிட்ட போய் காசு செலவுபண்ணி ஒரு ஊசி குத்துனாத்தான் நமக்கு நல்லா ஆன மாதிரி ஒரு நெனப்பு. சும்மாவா சொன்னாங்க நினைப்புதான் பொழைப்பை கெடுக்குதுன்னு.

கைக்கு எட்டின தூரத்துல ஏகப்பட்ட மூலிகைகள் நம் கண் முன்னாடி கெடக்குது நாம் சீந்தாமலேயே.எதிர்விளைவுகள் இல்லாத நம்ம நாட்டு மூலிகைகளை பயன்படுத்தி நாம் ஆரோக்கியமா இருப்போமுங்க. பொதுவாகவே மூலிகைகளாக இருந்தாலும் கூட மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்வது பாதுகாப்பு மிக்கதாகும்.

Read Previous

தந்தை இறந்த துக்கம் தாளாமல் 22 வயது மகள் தற்கொலை..!! சோகத்தில் உறவினர்கள்..!!

Read Next

BE, B.Tech முடித்தவர்களுக்கு மத்திய அரசில் ரூ.55,000 சம்பளத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular