பல்வேறு உடல் உபாதைகளுக்கு தீர்வு தரும் வீட்டு வைத்தியம்..!!

Oplus_131072

பல்வேறு உடல் உபாதைகளுக்கு தீர்வு தரும் வீட்டு வைத்தியம்!!*

 

சில உடல் உபாதைகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களின் மூலமே தீர்வு காணலாம்.கீழ்கண்ட தகவல்கள் சித்த மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.

• உடல் பருமன் குறைய வெள்ளை பூசணிக்காயை எடுத்து ஜூஸ் பிழிந்து காலையில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும். நெஞ்சு எரிச்சல் வராமல் இருக்கும்.

• சிறுநீரகத்தில் உப்பு தங்காமல் இருக்க வாழைத்தண்டு, புடலங்காய், கீரைத்தண்டு, முள்ளங்கி, திராட்சை, வெங்காயம், வெள்ளரிப்பிஞ்சு, வெங்காயத்தாள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

• செம்பருத்தி பூக்கள் மூன்றை எடுத்து அவற்றின் இதழ்களை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு எடுத்து பிழிந்து வடிகட்டி, கொஞ்சம் பால் சேர்த்து சாப்பிட்டால் ரத்தஅழுத்தம் குறையும்.

• பித்தம் தலைசுற்றல் சரியாக ஒருபிடி கொத்தமல்லி தழையை அரைத்து சாறு எடுக்கவும். அதில் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட, தலைசுற்றல் போகும்.

• ஒரு கோப்பை நல்லெண்ணெயில் 7, 8 பூண்டை நசுக்கிப் போடவும். அதை நன்றாக காய்ச்சவும். இறக்கி வைத்து ஒரு மூடி அளவு எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து எடுத்துச் சேர்த்து வைக்கவும். இதை தலையில் பூச்சிவெட்டு இருக்கும் இடத்தில் இரண்டு சொட்டு தேய்த்து வர, முடி வளர ஆரம்பிக்கும்.

• சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்க நாவல் கொட்டை பொடி, வெந்தயப்பொடி, கடுக்காய் தோல் ஆகியவற்றில் சமபாகம் எடுத்துக் கலந்து வைக்கவும். கொதிக்கும் தண்ணீரில் இதை ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து காலையில் கால் தம்ளர் குடிக்கவும்.

• வறட்டு இருமல், சூடு குறைய அதிமதுரம் பொடியை வாங்கி, ஒரு தம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் பொடி போட்டு கொதிக்க வைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடவும்.

• வாயு, வயிற்றுவலி நீங்க ஒரு ஸ்பூன் சீரகத்தை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து ஒரு தம்ளர் தண்ணீர் விடவும். நன்றாக கொதித்ததும் பனைவெல்லம் சேர்த்து குடிக்கவும்.

• கர்ப்பப்பையில் நோய் வராமல் தடுக்க துளசி, வில்வம், அருகம்புல், மிளகு உள்ளிட்டவை நாட்டு மருந்துக் கடைகளில் பொடியாகவே கிடைக்கும். இவற்றை வாங்கிக் கலந்து வைத்துக்கொண்டு வாரத்துக்கு ஒரு நாள் ஒரு ஸ்பூன் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.

• தினம் குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சம்பழத்தை பாதியாக வெட்டி போடவும். மறுநாள் காலை வரை இந்த தண்ணீரைக் குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Read Previous

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கை ரகசியங்கள்..!!

Read Next

கொட்டைக்கரந்தை மூலிகையின் மருத்துவ பயன்கள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular