ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.20.66 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பான காட்சிகளால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த படம், தமிழகத்துடன் வெளிநாடுகளிலும் சிறப்பான ஓப்பனிங்கை பெற்றதாக கூறப்படுகிறது. முதல் நாள் வசூலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.




