மதிய உணவை கையில் எடுத்து வந்த விஜய் – குவியும் பாராட்டுக்கள்..!!

முதலமைச்சர் விஜய் அவருடைய மதிய உணவை கையில் எடுத்து வந்து சட்டசபையில் சாப்பிட்டுள்ளார். இது தற்போது பாராட்டுக்களை பெற்று வருகின்றது.

விஜய்

தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்பு விழா  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தான் மதலமைச்சர் வரவேண்டி இருந்தது. ஆனால் காலை 8.48 மணிக்கே முதல்-அமைச்சர் விஜய் வருகை தந்தார்.

மறுநாள்  காலை 9.30 மணிக்கு சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதற்கும் சில மணி நேரத்திற்கு முன்னர் விஜய் வருகை தந்நதிருந்தார்.

12-ந்தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் சட்டசபையில் நடைபெற்றது.

அடுத்த நாள் (13-ந்தேதி) காலை 9.30 மணிக்கு சட்டசபையில், அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

3 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் தனது வழக்கமான பணியை செய்ய முதலமைச்சர் தன்னுடைய தலமை செயலகம் வந்துள்ளார்.

அரசு ஊழியர் போல காலை 9.55 மணிகே தலைமைச் செயலகம் வருகை தந்து மாலை 4 மணி வரை தலைமைச் செயலகத்தில்  ஆலோசனை நடத்தினார்.

மதிய உணவையும் காலையிலேயே கையோடு கொண்டுவந்த அவர், தலைமைச் செயலகத்திலேயே தனது அறையில் உணவையும் சாப்பிட்டுள்ளார்.

பின்னர், மாலை 4 மணிக்கு, தனது பணிகளை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் விஜய் வீடு திரும்பினார். விஜய் இப்படி அரச ஊழியர்கள் போல நடந்துகொண்டதற்கு அங்கிருந்த ஊழியர்களும் காவல்துறையினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Read Previous

ஹன்டா வைரஸின் தாக்கம்.. முன்னரே கணித்த பாபா வங்கா..!! இனி வரப்போகும் பேரழிவு என்ன?..

Read Next

வீடுகளுக்கு ரேஷன் வழங்கும் திட்டம்; நிதி வழங்காததால் முடங்கும் அபாயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular