திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரண விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்.15) முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ரிதன்யாவின் 2 செல்போன்களை தடயவியல் சோதனை செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டில் ரிதன்யாவுக்கு சொந்தமான இரண்டு மொபைல் போன்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி, ரிதன்யாவின் கணவர் கவின் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.




