சென்னை: திருப்போரூர் அருகே கார் விபத்தில் ஏர்பேக் திறந்து முகத்தில் மோதியதில், 7 வயது சிறுவன் உயிரிழந்தார். சம்பவத்தன்று, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வீரமுத்து, தனது மனைவி மற்றும் 7 வயது மகன் கவின் உள்பட 5 பேர் வாடகை காரில் சென்னை சென்றனர். அப்போது சுரேஷ் என்பவர் ஓட்டிச் சென்ற கார், திடிரென இடதுபுறம் திரும்பியதால், சிறுவன் சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ஏர்பேக் வெடித்ததில், சிறுவன் உயிரிழந்தார்.




