கரூர் சம்பவம் தொடர்பாக யார் மீதும் பழி போட விரும்பவில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கரூர் துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழி சுமத்தி பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. திட்டமிட்டு அரசு மீது பொய்களை சிலர் பரப்புவதால் உண்மையை விளக்க வேண்டியது கடமை” என குறிப்பிட்டுள்ளார். இன்று (அக்.15) சட்டப்பேரவையில் பேசிய அவர் தவெக தலைவர் விஜய்யை தாக்கி பேசுவதாக கூறப்பட்ட நிலையில், இப்பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.




