Oplus_131072
சுக்கானது பல சிறப்பு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது .அவை பற்றி…..
ஒரு துண்டு சுக்கு, ஒரு குண்டுமணி அளவு அதிமதுரம் இரண்டையும் சேர்த்து வாயில் அடக்கி கொண்டு, ஊறும் உமிழ் நீரை மட்டும் விழுங்கினால் குரல் கம்மல் நீங்கும். (வெந்நீர் அருந்த வேண்டும்)
தேனுடன் சுக்கு பொடியை குழைத்து உணவுக்கு முன் தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வர தொண்டைக்கட்டு சரியாகும்.
கொதிக்க வைத்த நீரில் சுக்குத்தூளை போட்டு இறக்கி வைத்து ஒரு டீஸ்பூன் தேன் விட்டு உணவுக்கு பின் தினமும் இரு வேளை விதம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் நாள்பட்ட ஜுர வறட்சி நீங்கும் .
கால் லிட்டர் பசும்பாலில் இரண்டரை கிராம் தோல் நீக்கிய சுக்கை கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் அருந்தி வர மூட்டு வலிகள், வாயு, அசதி நீங்கும்.
சுக்குத்தண்டை தோல் நீக்காமல் வாயில் போட்டு மென்று வர பல்வலி குறையும்.
தலைவலி தலைச்சுற்றலைப் போக்க சுக்கு கசாயம் அருந்தலாம்.
சுக்கு மிளகு திப்பிலி அதி மதுரம் ஆகியவற்றை சம எடை எடுத்து தூள் செய்து கசாயமாக்கி குடித்தால் சளியோடு கூடிய காய்ச்சல் வாய்ப்புண் மண்ணீரல் வீக்கம் அஜீரணம் போன்றவை குணமாகும்.
சுக்கு,கொத்தமல்லி இலை இரண்டையும் இடித்து தூளாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். ஊளைச்சதை விழாது .
தயிரில் சுக்குத்தூள் சேர்த்து வெல்லம் கலந்து சாப்பிட பித்தம் தீரும்.
தாய்ப்பாலில் சுக்கை உரசி, வயிற்றில் தடவ குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் நீங்கும்.




