மத்திய ஆயுதப்படைகள் மற்றும் டெல்லி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் (SI) வேலைவாய்ப்பு 2025
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (SSC) பட்டதாரிகளுக்கான ஒரு சிறப்பு வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 3,073 சப்-இன்ஸ்பெக்டர் (SI) காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
-
டெல்லி காவல்துறை: ஆண்கள் – 142 இடங்கள், பெண்கள் – 70 இடங்கள்
-
மத்திய ஆயுதப்படைகள் (CAPF): 2,861 இடங்கள்
கல்வி தகுதி: ஏதேனும் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 – 25 வயது (01-08-2000 முதல் 01-08-2005 பிறந்தவர்கள்). அரசு விதிமுறைகளின் படி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் வயது தளர்வு பெறுவர்.
தேர்வு முறை:
-
கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்துத் தேர்வு (CBE)
-
உடல் திறன் தேர்வு (PET)
-
மருத்துவ பரிசோதனை
தேர்வு மையங்கள் (தமிழ்நாடு): சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, கரூர், வேலூர், புதுச்சேரி
விண்ணப்பிக்கும் முறை: SSC அதிகாரப்பூர்வ இணையதளம் https://ssc.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-10-2025




