கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (அக்., 16) அறிவிப்பு வெளியிட்ட அவர், வரும் டிச., 15ஆம் தேதி முதல் விடுபட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.30 ஆயிரம் கோடி உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.




