இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம், 62 ஆயிரம் பேர் வசிக்கும் அபிபுரா நகரில் இருந்து 200 கி.மீ. தொலைவில், 70 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரம் குறித்த விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.




