பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இந்தியத் திரையுலகில் நடிகைகளின் நிலை குறித்து பேசியுள்ளார். அப்போது அவர், “இந்தியாவில் நடிகர்களை மையமிட்டே கதைகள் உருவாக்கப்படுகின்றன. நடிகைகள் பெரும்பாலும் காதல் காட்சிகளுக்கும், கவர்ச்சி நடனங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள்” என்று விமர்சித்துள்ளார். மேலும், “இப்படி நடிகைகளின் திறமையை சீரழிக்கும் போக்கை இயக்குநர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




