ஒரு கணவர் அவரது மனைவியை இழந்த பிறகு வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதியது..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_16908288

ஒரு கணவர் அவரது மனைவியை இழந்த பிறகு வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்…

 

❤ எழுபத்தைந்து வயதில்….. ஆதரவு இன்றி நிக்குது மனசு…

 

❤ நாற்பதைந்து வருடம் – ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்….

 

❤ என் கோபத்தை தள்ளுபடி செய்து ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்….

 

❤ அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்…

 

❤ ஒரு நாளாவது நான் சமையல் செய்து அவளுக்கு ஊட்டி இருக்கலாம்…

 

❤ ஒரு நாளாவது அவளுக்கு பதில் – நான் அவளது துணியையும் சேர்த்து துவைத்து இருக்கலாம்…

 

❤ ஒரு நாளாவது TV யையும், Mobil லையும் அணைத்துவிட்டு, அவளை கொஞ்சி இருக்கலாம்…

 

❤ ஒரு நாளாவது வேலை தளத்தின் கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே விட்டு விட்டு வந்து இருக்கலாம்…

 

❤ ஒரு நாளாவது, என் விடுமுறை நாட்களில் – அவளை சினிமாவுக்கு அழைத்து சென்று இருக்கலாம்…

 

❤ ஊர் ஊராய் சுற்றி அவளை உற்சாகப்படுத்தி இருக்கலாம்…

 

❤ அவள் விரும்பி கேட்காத போதும் – ஒரு புடவை வாங்கி கொடுத்து இருக்கலாம்…

 

❤ ஒரு மாசமாவது− என் முழு சம்பளப் பணத்தை அவளிடமே கொடுத்து இருக்கலாம்…

 

❤ ஒரு நாளாவது காலையில் அலாரத்தை கொஞ்சம் அணைத்து வைத்து அவளை தூங்க விட்டு இருக்கலாம்…

 

❤ நீ சாப்பிட்டியா என்று அவளை ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்…

 

❤ நீயும் வா என்னுடன் வந்து சாப்பிடு என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்…

 

❤ அவள் உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது விசாரித்து இருக்கலாம்…

 

❤ அவள் தன்னை கவனிப்பதை விடுத்து பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு நான் கொஞ்சம் – அவளை

 

கவனித்து இருக்கலாம்…

 

❤ அவள் நோயில் விழுந்த போது நான் கடன் பட்டேனும் அவளை காப்பாற்றி இருக்கலாம்…

 

❤ என் தாயே! தாரமே ! − நீ என்னுடன் இருந்த போது நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்…

 

❤ நீ என்னை விட்டு போனதும் நான் பலமுறை கால் தடுக்கி விழுகிறேன்…

 

❤ என்னை தூக்கி விடவும் மூத்தவனுக்கு நேரம் இல்லை…

 

❤ தேனீர் ஏதாவது போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கு சினம் வருது…

 

❤ என் மனைவியே உன்னை நான் தினமும் கொண்டாடி இருக்க வேண்டும்…

 

❤ நான் தவறுகள் இழைத்ததற்கு என்னை நீ மன்னித்து விடு…

 

❤ ஒரு முழப் பூவாவது ஒரு நாளாவது உனக்கு வாங்கி தராதவன் நான்…

 

❤ மூச்சு இழந்த – உன் புகைப்படத்துக்கு தினம் தினம் மாலை இட்டு உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்…

 

மனைவியே! என்னை மன்னித்து விடு…

 

❤ மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால் நீயே என் மனைவியாய் வந்து விடு… நான் உன்னை கொண்டாட வேண்டும்…

 

❤ எழுபத்தைந்து வயதில்… இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க….

 

❤❤❤ உங்கள் மனைவியை தினமும் நீங்கள் நேசியுங்கள்

 

❤❤❤ வாழ்க்கை வசந்தமாகும்.

Read Previous

செல்வம் பெருக வழிமுறைகள்..!!

Read Next

பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular