Oplus_16908288
இதுவும் கடந்து போகும். இதை கவனத்தில் வையுங்கள். நிரந்தரமானவர்கள் என்று யாரும் இல்லை. இதை எதார்த்தமாய் சிந்தியுங்கள்.
வருத்தப்படுவதில் பயன் இல்லை. இதை மறந்து விடாதீர்கள். பிறப்பும் இறப்பும் வந்தே தீரும். இடையில் உள்ள அந்த சின்னச் சின்ன சந்தோஷங்களை தொலைத்து விடாதீர்கள்.
நல்ல எண்ணங்களை விதைத்தவர்களுக்கு அறுவடை காலம் ஆனந்தமானது. உங்கள் எதிர்காலம் உள்ளங்கை ரேகையில் இல்லை. அது உங்கள் உள்ளத்தின் உள் எண்ணத்தில் உள்ளது.
எண்ணங்கள் என்னும் மந்திர சாவியை சரியாக பயன்படுத்தினால். திறக்காத கதவுகளையும் திறக்கலாம்.
உங்கள் வீட்டின் சாவி உங்களிடம் இருப்பது போல், உங்கள் மனதின் சாவியும் உங்களிடமே இருக்க வேண்டும். கண்ணீர் வர்ற மாதிரி நடிக்கலாம் ஆனால், வியர்வை வர்ற மாதிரி நடிக்க முடியாது.
நாம் விரும்பாதது வந்தாலும் துன்பம் நாம் விரும்பியது விலகினாலும் துன்பம். விரும்பியதை நாம் அடைந்து அதை இழந்தாலும் துன்பம்.
அளவு கடந்த துன்பம் வரும் போதும் அளவு கடந்த மகிழ்ச்சி வரும் போதும். இதுவும் கடந்து போகும். அது போன்று வெற்றியும் நிரந்தரமல்ல தோல்வியும் நிரந்தமல்ல. தோல்வியும் துன்பமும் கூட நிரந்தரமல்ல இதுவும் கடந்து போகும் ஒரு நாள்.
உலகில் உள்ள அனைத்திற்கும் ஒரு முடிவு உண்டு. உங்களுடைய பிரச்சினைகளுக்கும் சேர்த்துத் தான்.
நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருந்தால் வெற்றி நிச்சயம்.




