கடலூர்: புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லையில், புதன்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அசோதை (69) மற்றும் அவரது மகள் ஜெயா (40) உயிரிழந்தனர். ஜெயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.




