மனைவி உடலுறவுக்கு மறுத்ததால் அவரது கணவர் இரண்டு மாடி கட்டிடத்திலிருந்து தள்ளிவிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் முகேஷ் அஹிர்வார், மனைவி தீஜா (26). இவர்களுக்கு 2022ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கடந்த திங்களன்று மனைவியை படுக்கைக்கு அழைத்து முகேஷ் சண்டை போட்டுள்ளார். தீஜா மறுக்கவே மாடியில் இருந்து தள்ளிவிட்டார். உயிருக்கு போராடிய தீஜாவை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




