நாம் வாழ்ந்த ஊர் அது
நாம் வசித்த வீடு அது
நாம் படித்த பள்ளி அது
நாம் நடந்த தெரு அது
கூடவே…..
பள்ளி நண்பர்கள்
தெரு நண்பர்கள்
மிட்டாய் வாங்கிய கடை
தேநீர் குடித்த கடை
பக்கத்து வீட்டார்
எதிர் வீட்டார்
சண்டை பிடித்த ஊரவர்கள் என …
இதயத்தில் அத்தனை பாரம்
அத்தனை நேசம்
இதனை இறக்க எத்தனை பேர்
முயன்றுள்ளோம்
இருபது வருட முடிவிலேனும்
ஒரு முறை சொந்த ஊர் சென்று வாருங்கள்
மனம் மகிழ்ந்து பருகுங்கள்
ஆடு மாடு கோழிகள்
காடு மேடு வயல்வெளிகள்
குளம் குட்டைகள் வாய்க்கால்கள் என்று
இன்னும் எத்தனை எத்தனையோ
அத்தனை ஞாபகங்களையும்
ஒரு சேர சுமந்து கொண்டிருக்கும்
உங்கள் இதயத்துக்கு விடுமுறை அளியுங்கள்![]()




