டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நவம்பர் 7ஆம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விஏஓ, ஜூனியர் அசிஸ்டண்ட், தட்டச்சர் உள்ளிட்ட 4,662 பணியிடங்ளுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் கடந்த 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வர்கள் https://apply.tnpscexams.in/ என்ற இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 1800 419 0958 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.




