எதுவும் நிரந்தரமில்லை இவ்வுலகில்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_131072

எதுவும்_நிரந்தரமில்லை_இவ்வுலகில்

#வாழ்க்கையை சற்று தனித்து வாழவும் பழகிக்கொள்ளுங்கள், ஏனெனில் நம்மோடு இருப்பவர் என்று காற்றில் மறைந்து போவார் என்று தெரியாது.

அனைவரும் நம் முகத்தின் முன் நடந்துகொள்வது போன்று முதுகின் பின் இருப்பதில்லை.

#சர்க்கரை போல இனிக்க பேசினாலும், ஒருநாள் பாகற்காய் போன்று மாறும் ஆற்றல் கொண்டவர்.

நமக்கான நேரத்தையும் திட்டத்தையும் வருங்காலத்திற்கு நாம் தான் சேமிக்க வேண்டும், நம்மைத் தவிர வேறு யாராலும் நமக்காக அதை சிறப்புறச் செய்ய இயலாது.

அதிக நட்பு வட்டாரங்கள் சில சமயங்களில் நம்மையே வாட்டி விடும்.( நான் அனுபவித்து பட்டுக்கொண்டது).

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது எப்படி ஒரு அங்கமாக உள்ளதோ அதுபோல இன்னல்கள், துயரங்களும் கூட ஒரு அங்கமே. ஏனென்றால் வாழ்க்கையின் வடிவம் வட்டம்.

நாம் நாமாகவே இருக்க வேண்டும், பிறரை போல அனைத்து வகையிலும் மாறலாம் என நினைத்தால் உலகம் உங்களை மிதித்து அடக்கி விடும்.

என்னிடம் அனைத்தும் உள்ளது எனப் பெருமை அடித்துக் கொள்வது முட்டாள்தனமே. இன்று உங்களுடையதாக இருப்பது நாளை வேறொருவருக்கு சொந்தமாகலாம்.

வாழ்க்கையை பிறரை சார்ந்து வாழ்ந்தால், நாம் நாமாகவே இருக்க முடியாது.

எந்த செயலுக்கும் அடிமையாகக் கூடாது..
அது பணமாக இருந்தாலும் சரி பொருளாக இருந்தாலும் #அன்பாக இருந்தாலும் சரி…. அடிமை ஆகிவிட்டால் அதிலிருந்து மீள்வது கடினம்..

Read Previous

நவம்பர் 7-ஆம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்ற அவகாசம்..!!

Read Next

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடந்த கண்கலங்க வைக்கும் உரையாடல்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular