கோவில்களில் அடிக்கும் மணி ஓசைகளிலிருந்து வரும் உம் என்ற சப்தங்களை நமதுபுருவ மத்தியில் கேட்பது போல பாவித்து உணர்ந்து கொண்டே இருந்தால் சில நாட்களில் வெண்மையான ஒளி வடிவமாக அங்கே காட்சி தரும். அதுவே ஜோதி வடிவம். இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உணர்ந்து நமது புரட்சித் துறவி வள்ளலார் அவர்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்கிறார். சிவவாக்கியர் என்கிற சித்தர் ,”ம்” என்ற சப்தங்களிலிருந்து வரும் ஓசையில் உணர்ந்து மனதை அடக்கினால் தானாகவே யோகம் புரியவரும் என்கிறார்.. இது போன்ற சக்தியை உணர நாம் நெற்றியில் திருநீறு பூசி கொள்கிறோம். மனதை அடக்க வேண்டும் என்றால் நெற்றி மையமான புருவ மத்தியில் 12 நாள் வரை உறங்கும் போதும் உண்ணும் போதும் நடக்கும் போதும் பேசும் போதும் இந்த இடத்தில் நமது நினைவை விட்டு அகலாமல் உணர்வை வைத்திருந்து செயல்பட்டால் பிரபஞ்சத்தின் ரகசியம் தெரிய வரும். பஞ்சபூதங்களும் ஒன்று சேர்ந்து நெற்றி மையத்தில் ஜோதியாக தெரியும்.. ஜோதியை தரிசனம் செய்தவர்களுக்கு பிரபஞ்சத்தின் ரகசியம் படிப்படியாக தெரியவரும்.
.




