நெற்றிக்கண் என்பது இறைவன் இருப்பிடம் ஆகிய இரண்டு கண்களின் இடையில் புருவம் மத்தியில் இருக்கும் நெற்றி நடு மையமாகும். நமது மனதை புருவம் மத்தியில் நிறுத்தி உலகில் நடைபெறும் பஞ்சபூத நிகழ்வுகளையும் புருவமத்தியின் வழியாக உணர்வது நெற்றிக்கண் திறப்பதற்கான வழிமுறையாகும்.. பஞ்சபூதம் என்பது நிலம், நீர் ,நெருப்பு ,காற்று ,ஆகாயம். அதாவது நிலத்தின் நடைபெறும் அதிர்வுகளை காதின் வழியாக உணராமல் நமது நெற்றிக்கண் வழியாக உணர வேண்டும். நீர் அருந்தும் பொழுது நாக்கில் உணராமல் நெற்றிக்கண் வழியாக உணர வேண்டும். நெருப்பின் தன்மையை உணரும் பொழுது உடல் வழியாக உணராமல் நெற்றிக்கண் வழியாக உணர வேண்டும். காற்றின் தன்மையை உணரும் பொழுது உடல் வழியாக உணராமல் நெற்றிக்கண் வழியாக உணரவேண்டும். ஆகாயத்தின் தன்மையை உணரும் பொழுது நெற்றிக்கண் வழியாக உணர வேண்டும்… இது போன்று பஞ்சபூத நிகழ்வுகளையும் உணரும் பொழுது நெற்றிக்கண் வழியாக உணருமாறு உருவகபடுத்திக் கொள்ள வேண்டும்.. இவ்வாறு பயிற்சி மேற்கொள்ளும் பொழுது எதிர்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள் நம் கண் முன் மனத்திரையில் உருவகமாக காட்சியாக தோன்றும்.. அல்லது உணர்வுகள் வெளிப்படும்..





