Oplus_131072
* வால்நட்டில் உள்ள ஆல்பா லியோலெனிக் அமிலம் ஆண்களின் உயிரணுக்களை பெருக்கி விருத்தியடையச் செய்கிறது.
# ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும் தன்மை கொண்டவை இந்த கொட்டைகள். மூளையை அமைதிப்படுத்துவதோடு, ‘டிமென்ஷியா’ என்ற ஞாபக சக்தி குறைவு நோயையும் இது வரவிடாமல் தடுக்கிறது.
* இதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஒமேகா 3 அமிலம் அதிகம் கொண்டது வால்நட். இதனால் கெட்ட கொழுப்பை உடலில் குறைத்து, நல்ல கொழுப்பை அளிக்கிறது.
* இதனை பாலில் கொதிக்க வைத்து அருந்தினால் கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் வராமல் தடுக்கப்படுகிறது என்றும் பாரம்பர்ய வைத்திய முறைகள் கூறுகிறது.
* மூளையின் அமைப்பைக் கொண்டுள்ள இந்த பருப்பு உண்மையில் மூளைச்சோர்வை நீக்கி நினைவாற்றலை அதிகரிக்கிறது.
* உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அழகான கட்டுடலைத் தரும் ஆற்றல் கொண்டது. தோலுக்கு மினுமினுப்பை தந்து சொறி, சிரங்கு, படை போன்றவற்றை குணமாக்கிடவும் செய்வது வால்நட்…..




