பொதுவாக வீடுகளில் உள்ள பெண்கள் தங்கம் நகையை தினமும் பயன்படுத்துவதால் அது பளபளப்பை இழந்து விடும்.பார்ப்பதற்கு மங்கி போன நகைகள் போன்று இருக்கும். தங்க வளையலாக இருந்தாலும் சரி, கவரிங் வளையலாக இருந்தாலும் சரி பளபளப்பாக இருக்கும் பொழுது தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
அப்படி இல்லாதவர்களை சில நுட்ப முறைகளை பயன்படுத்தில் வீட்டிலேயே பளபளப்பாக மாற்றலாம்.
அந்த வகையில், தங்க வளையல்களையும், கவரிங் நகைகளையும எப்படி பளபளப்பாக மாற்றலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- ஷாம்பு
- மஞ்சள்
- தண்ணீர்
- ஒரு பவுலில் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூவை போட்டு, அதில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும். அதில் தங்க வளையல்களை போட்டு 5 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.
- 5 நிமிடத்திற்கு பின் டூத் பிரஷ் எடுத்து தங்க வளையல் மீது தேய்க்க வேண்டும். இது போன்று அழுக்காக இருக்கும் கவரிங் நகைகளையும் ஒரு முறை மேல்புறம் நல்லா பிரஷ் வைத்து தேய்க்க வேண்டும்.
அதன் பின்னர், உள்புறம் அழுக்கு இருந்தால் அதையும் இந்த மாதிரி பிரஷ் பண்ணி தேய்த்து விட்டு வளையல் ஈரமா இருக்கும்போதே குழம்பு மஞ்சள் அதாவது குழம்பு மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து பூசி வைத்திருந்து, மீண்டும் தேய்க்கவும்.
இப்படி தேய்க்கும் பொழுது தங்கமோ, கவரிங்கோ வளையல் வைரம் போன்று ஜொலிக்கும்.




