160 நோய்களுக்கு அருமருந்தாகும் ஒரு காய்.. புரிந்து கொள்ளமுடியாத மருத்துவ விந்தை..!!

சித்த மருத்துவத்தில் ஒரு கடுக்காய் தாய்க்கு நிகராக மதிக்கப்படுகின்றது.அதாவது கடுக்காய் தாயை விட சிறந்தது என்பதே அதன் பொருள்.  அறுசுவையும் ஒருங்கே கொண்டுள்ள ஒரே காய் கடுக்காய் தான்.

 

 

கடுக்காய் சாப்பிடும் போது எந்தவித சிக்கலும் ஏற்படாமல் உடலில் உள்ள நோய்கள் குணமாகும் என்பதன் மேன்மை கருதியே சித்த மருத்துவத்தில் கடுக்காய் கடுக்காய் தாயினும் மேலாம் என குறிப்பிடப்படுகின்றது.எனவே அத்தகைய சிறப்பு வாய்ந்த கடுக்காயில் இருக்கக்கூடிய மருத்துவப் பயன்களை பற்றி இப்பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

 

கடுக்காயின் மருத்துவ பயன்கள்

பொதுவாக எப்போதும் கடுக்காயை பயன்படுத்தும் போது உள்ளே உள்ள விதையை பயன்படுத்தக் கூடாது. விதையை நீக்கிவிட்டு மேல் தோலோடு சேர்த்து நன்கு பொடித்து, பவுடர் போன்று பயன்படுத்த வேண்டும்.

கடுக்காயில் அதிகப்படியான துவர்ப்பு சுவை உள்ளதால் சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. வயிற்று உபாதைகளுக்கு மூல காரணமாக இருக்ககூடிய மலச்சிக்கல் பிரச்சினையை தீர்ப்பதில் கடுக்காய் முக்கிய பங்காற்றுகிறது. எனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடுக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

 

குறிப்பாக கருங்கடுக்காய், மலமிளக்கியாக செயல்படுவதுடன் உடலுக்கு அழகும், மெருகும் தரும். பால் கடுக்காய், வயிற்று மந்தத்தைப் போக்கும் தன்மை கொண்டது.

கடுக்காய் பொடியானது உச்சி முதல் பாதம் வரை 160 நோய்களுக்கு அரும்மருந்தாக இருப்பதாக மருத்துவ துறை வளர்ச்சியடைவதற்கு முன்னரே நமது முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கின்றார்கள்.

 

பசி இருந்தும் சாப்பிட முடியவில்லை  என்ற உணர்வை ஏற்படுத்தும், உணவின் மீது வெறுப்பு வரும் அரோசக நோய்க்கு, கடுக்காய் துவையல் சிறந்த மருந்தாக அறியப்படுகின்றது. கடுக்காயை கஷாயமாக்கி அருந்தினால், மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்து மலம் இளகும். சர்க்கரை நோய் இல்லாமலேயே அதிகமாக சிறுநீர் கழிக்கும் வியாதியையும் கடுக்காய் குணப்படுத்தும்.

கடுக்காயின் தோலை பொடி செய்து தினமும் மாலை சாப்பிட, இளநரை மாறும். மூக்கிலிருந்து ரத்தம் கசியும் நோய்க்கு இது சிறந்த மருந்தாக இருக்கும். துவர்ப்புச் சுவைமிக்க கடுக்காய், மலமிளக்கும். அதே சமயம் ரத்தமாக கழிச்சல் ஆகும் சீதபேதிக்கும் மருந்தாகும் என்பது இன்றளவும் புரிந்து கொள்ளமுடியாத மருத்துவ விந்தையாகவே உள்ளது.

 

காரணம் ஒரே பொருள் மலத்தை இளக்கவும், பேதியை நிறுத்தவும் பயன்படுவது என்பது வியப்பை ஏற்படுத்துகின்றது.கடுக்காயில் உள்ள பல்வேறு நுண்ணிய மருத்துவக் குணமுள்ள பொருட்கள் தேவைக்கேற்றபடி பயனாவது, இயற்கையின் நுணுக்கமான கட்டமைப்பு பறைசாற்றுகின்றது.

கடுக்காய் பொடியை  உப்புடன் சாப்பிட்டால், கப நோய்களும், சர்க்கரையுடன் சாப்பிட்டால் பித்த நோயும், நெய்யுடன் சாப்பிட்டால் வாத நோயும், வெல்லத்துடன் சாப்பிட்டால் அத்தனை நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்.

கல்லீரல் பிரச்சியை இருப்பவர்கள் அதற்கென வேறு எந்த மருத்துவம் எடுத்துக்கொண்டாலும் கடுக்காய் பொடியை நிலக்கடலை அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் காமாலை வராமலும் தடுக்கின்றது.

 

கடுக்காயில் கேலின் மற்றும் கேலோனின் எனும் வேதிப்பொருட்கள் உள்ளன. இந்த வேதிப்பொருட்கள் கொழுப்பு சார்ந்த நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே கொழுப்பு சார்ந்த நோய் உள்ளவர்கள் தினமும் 3 கிராம் கடுக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது.

கடுக்காயில் சபோனின் எனும் ஆல்கலாய்டுகள் உள்ளது. இந்த ஆல்கலாய்டுகள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடலின் எடை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

 

 

பெருங்குடல் பகுதியில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தன்மையை கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் கடுக்காயில் இருப்பதால் பெருங்குடல் சம்பந்தப்பட்ட அலர்ஜி நோய் இருப்பவர்கள் கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

Read Previous

நீங்கள் தொலைபேசியை பிடிக்கும் முறை வைத்து உங்களை பற்றி கூறலாம்- நீங்கள் எப்படி??..

Read Next

வெறும் வயிற்றில் மஞ்சள் மற்றும் நெல்லிக்காய் தண்ணீர் கலந்து குடித்தால் என்ன நடக்கும்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular