நெல்லிச்சாற்றை அருந்தி வர எந்த நோய் குணமாகும் தெரியுமா..??

Oplus_131072

பொதுவாக நெல்லிக்கனியும் அதன் சாறும் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கிறது .உதாரணமாக நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து, நரை முடிகள் மேல் தேய்த்து, ஒரு மணிநேரம் ஊறிய பின் இளஞ்சூடான நீரில் குளித்து வர நரை மேலும் தோன்றாது.இதுபோல நெல்லி நமக்கு அள்ளி கொடுக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு சுவாச பிரச்சினை இருக்கும் .நெல்லியை இடித்துச் சாறு பிழிந்து தேன் சேர்த்து சிறிதளவு திப்பிலிப் பொடி கலந்து சாப்பிட்டு வர சுவாச காசம் குணமாகும்.
2.உலர் பழத்தைச் சாப்பிட்டு வர கண்பார்வை கூடும். வயிற்றுப்போக்கு நிற்கும்.
3.சிலருக்கு நுரையீரல் பிரச்சினை இருக்கும் .நெல்லிச்சாற்றை அருந்தி வர நுரையீரல் பெருக்கம் தீரும்.
4.. நெல்லியை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி, மூலநோய் நீங்கும்.
5.சிலருக்கு சுகர் இருக்கும் .நெல்லிச்சாறு உடலிலுள்ள அதிக சர்க்கரையைக் குறைக்கும்.
6. சிலருக்கு ஹார்ட் பிரச்சினை இருக்கும் .நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி தின்றால் இதயக் கோளாறுகள் நீங்கும்.
7.நெல்லி மூலம் நரம்புத் தளர்ச்சி, இளநரை, தோல் சுருக்கம் போன்றவை குணமாகும்.
8.பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து சாப்பிட்டுவர கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாகும்.
9.சிலருக்கு உடலில் சொறி இருக்கும் .நெல்லியை உலர்த்திப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்க உடலில் சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.
10.சிலருக்கு கண் நோய் இருக்கும் உலர் நெல்லியை நீரில் போட்டு ஊறவைத்து இந்நீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும்.
11.நெல்லிப் பொடியுடன் தேன் அல்லது நெய் கலந்து இரவில் சிறிதளவு உண்டுவர கண்பார்வை மங்குதல் மாறும்.

Read Previous

இல்லத்தரசிகளுக்காக ஒரு பதிவு..!! சமையலில் செய்யக்கூடாதவை..!!

Read Next

நடராஜர் சிலையை வீட்டில் வைக்கலாமா..?? – வாஸ்து சொல்லும் உண்மை ரகசியங்கள்..!! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular