அண்மையில் அதிமுகவைச் சேர்ந்த பல தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், இன்று (ஜன.05) திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேலா ராமமூர்த்தி தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அவரது வருகை கட்சிக்கு கலாச்சார மற்றும் சித்தாந்த ரீதியான வலுவை அளிக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




