ஆளுங்கட்சியான திமுகவில், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் சுமார் 70% எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016ல் போட்டியிட்டவர்களில் 90% பேருக்கு 2021ல் வாய்ப்பு வழங்கப்பட்டு, திமுக 125 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. தற்போது கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் குறித்து ரகசிய சர்வே நடத்தப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் பெரும்பாலானோருக்கு சீட் மறுக்கப்படும் என திமுக வட்டாரம் தெரிவிக்கிறது.




