பப்பாளி விதைகளை எடுத்து கொள்வதால் உடலில் ஏற்படும் ஆச்சரியங்கள்..!!

Oplus_131072

 

பொதுவாக பப்பாளி பழத்தை சாப்பிட்டு விட்டு அதில் உள்ள கொட்டைகளை நாம் தூக்கி வீசி விடுவது உண்டு. இன்னும் ஒரு சிலருக்கு பப்பாளியில் விதைகள் இருப்பது தெரியாமலே போய் விட்டது. ஏனெனில் இப்போது வரக் கூடிய ஹைப்ரிட் பப்பாளிகளில் கொட்டைகளே இல்லை. விதைகள் இருக்கும் பப்பாளியை சாப்பிடுவது தான் நம் உடலுக்கு நல்லது. அதிலும் பப்பாளி விதைகளில் பப்பாளி பழத்தை காட்டிலும் அதிகமான சத்துக்கள் உள்ளன.

அதன் நன்மைகளை தெரிந்து கொள்வதற்கு முன்பு கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் பப்பாளி மற்றும் அதன் விதைகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் இந்த பப்பாளி விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாகவோ அல்லது பப்பாளி விதைகளை தண்ணீர் விட்டு அரைத்தும் ஜூஸ் போல எடுத்து கொள்ளலாம். இது பிடிக்காதவர்கள் பாலோடு கலந்தும் எடுத்து கொள்ளலாம்.

இதனை உட்கொள்ளும் போது நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். பப்பாளி விதைகளின் சுவை மிளகு போல சிறிய அளவு கார சுவை கொண்டதாக உள்ளது. இதில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுகிறது. மேலும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி தன்மை கொண்ட பப்பாளி விதைகள் மூட்டு வலி, மூட்டு வீக்கம், பக்கவாதம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும்.

பப்பாளி விதைகளில் உள்ள பெப்பைன் என்ற என்சைம் ஜீரண சக்தியை கொடுக்கிறது. கல்லை கூட கரைத்து ஜீரணிக்கக் கூடிய தன்மை இதற்கு உண்டு. பப்பாளி விதைகளை காய வைத்து தேனோடு கலந்து எடுத்து கொள்ளும் போது நம் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரித்து நம்மை புத்துணர்ச்சியாக இருக்க செய்கிறது. இதனால் நம்மால் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

பப்பாளி விதைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. அது மட்டுமல்ல குடலில் உள்ள புழு பூச்சிகளையும் உடலை விட்டு வெளியே அனுப்புகிறது. இதன் மூலம் நம் உடல் சுத்தமாகிறது. பொட்டாசியம் மற்றும் ஃபாட்டி ஆசிட் நிறைந்த பப்பாளி விதைகள் நம் உடலின் மெட்டபாலிஸத்தை அதிகரித்து தருகிறது. இதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

இதில் இருக்கக் கூடிய ஒரு சில என்சைம்கள் ஆண்மை குறைவு பிரச்சனையை சரி செய்ய வல்லது. எனவே ஆண்மை குறைவு உள்ளவர்கள் இதனை எடுத்து கொள்ளலாம். பப்பாளி விதைகளை கஷாயமாக வைத்து பருகும் போது சிறுநீர் கற்கள் மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருந்தால் குணமடைந்து விடும். போலிக் ஆசிட் உள்ள பப்பாளி விதைகள் புற்றுநோய் அணுக்களை உருவாக விடாமல் தடுக்கும். ஏற்கனவே உருவான புற்றுநோய் அணுக்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது..!

Read Previous

தாலி சரடில் உள்ள ஒன்பது இழைகளும்..!!அவற்றின் ஒன்பது தத்துவங்களும்..!!

Read Next

படித்ததில் கண்ணீர் வரவைத்த பதிவு..!! கண்டிப்பா படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular